ஞாயிறு, 7 ஜூலை, 2024
வெள்ளி, 30 டிசம்பர், 2022
கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை : திருத்தந்தை பிரான்சிஸ்
நாம் மகிழ்வில் திளைத்தாலும், துயரத்தில் துவண்டாலும், கடவுள் நம்மை தனியே விட்டுவிடுவதில்லை. அவர் என்றும் நம்மோடு உடன்பயணிக்கின்றார் : திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் மனிதத் தன்மையையும் வாழ்க்கையையும் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் அளவிற்குக் கடவுள் நம்மை அதிகமாக அன்பு கூர்கிறார் என்று டிசம்பர்29, இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மானுவேல், அதாவது, அவர் நம்மோடு உடனிருக்கும் கடவுள்.
இருளகற்றும் ஒளி மற்றும் நம் பயணத்தில் நம்முடன் ஒன்றாகப் பயணிக்கும் மென்மையான
பிரசன்னம் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் மகிழ்வில் திளைத்தாலும், துயரத்தில் துவண்டாலும், அவர் நம்மை தனியே விட்டுவிடுவதில்லை
என்றும் ஒருபோதும் கைநெகிழ்வதில்லை என்றும், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு
செய்துள்ளார்.
டிசம்பர் 24, இச்சனிக்கிழமை இரவு வத்திக்கானின்
புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று வழி
நடத்திய கிறிஸ்து பிறப்புப் பெருவிழாத் திருப்பலியில் வழங்கிய மறையுரையிலும்
கடவுளின் உடனிருப்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது,
"தீவனத் தொட்டியில்
பிறந்துள்ள கிறிஸ்து நம்முடன் நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. அவர் நமது உணவாக
வேண்டும் என்பதற்காக அதில் தன்னை வெளிப்டுத்துகிறார். அவர் நம் இதயங்களைத் தொடவும், வரலாற்றின் போக்கை மாற்றும் வலிமை
அன்புக்கு மட்டுமே உள்ளது என்பதை நமக்குச் சொல்லவுமே அதில் பிறந்துள்ளார். அவர்
நமைவிட்டுத் தூரப் போய்விடாமல் நம்முடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கவும், விண்ணக அரியணையை விடுத்து ஏழ்மை
நிலையில் தன்னை ஒரு தீவனத் தொட்டியில் வெளிப்படுத்தவும் திருவுளம் கொண்டார்
என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடலாமா?
கிறிஸ்தவப் பார்வையில், சூரியனையும் மாடுகளையும் தெய்வமாக வழிபடாமல், அவற்றைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகைய...