இயேசு இந்த உவமைகளின் மூலம் யூத சமுதாயத்தின் நிலையை மாற்ற முனைவதைத் தெளிவாக
எடுத்துரைத்தார். அவ்வளவுக்குப் பழமைச் சட்டங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள்
சமூகத்தை வளர்ச்சியில்லாமல் கட்டுப்படுத்தி வந்தன.
அவருடைய பார்வையில், புதியவை பழையவற்றோடு ஒட்டிப்போகாது, மாறாக அதை
முற்றிலுமாகப் புதுப்பிக்கவேண்டும். அவரது உவமைகள் மூலம், பழைய சட்டங்கள்
மற்றும் சடங்குகளை மாற்றி, புதிய விழுமியங்களை வளர்க்க வேண்டும் என்பதைக்
கூறினார். பழைய சட்டங்கள் பல சாமானிய மக்களின் வாழ்க்கையைக்
கடினமாக்கியது.
இயேசு சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். இன்றைய
காலத்திலும் நமது வாழ்க்கையில் இந்தப் பாடங்கள் பொருந்துகின்றன. பழமையான
எண்ணங்களையும் பழமையான முறைகளையும் மாற்ற, புதிய மற்றும் முன்னேறிய மனநிலையை
ஏற்றுக்கொள்வது முக்கியம்.
இயேசுவின் உவமைகள் நமக்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்த எப்போதும் ஊக்குவிக்கும்.
அன்புள்ள இறைவா! பழைய பழக்கவழக்கங்களில் அடைக்காமல், புதிய எண்ணங்களையும்
மாற்றங்களையும் என் வாழ்க்கையில் ஏற்படுத்துவதற்கு என்னை உதவிடு.
மனிதகுலத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் செயல்கள்
அதிகார சமநிலையைப் பற்றி மட்டும் சிந்திப்பது போதாது, புதிய
பிரச்சினைகளுக்கு பதிலளித்தல், சுற்றுச்சூழல், பொது சுகாதாரம், கலாச்சாரம்
மற்றும் சமூக சவால்களுக்கு உலகளாவிய வழிமுறைகளுடன் எதிர்வினையாற்றுவது
ஆகியவையும் தேவை. - பேராயர் காலகர்.
அதிகாரம் அல்லது மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, திருஅவையின் தூதுறவானது அனைத்து மனிதகுலத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், மனித மாண்பை நிலைநிறுத்துகின்ற மற்றும் நீடித்த அமைதிக்காக போராடுகின்ற கொள்கைகளில் வேரூன்றியுள்ளது என்றும் கூறினார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.**
ஜூலை 5 வெள்ளிக்கிழமை மணிலாவின் பசய் நகரத்தில் நடைபெற்ற வெளிநாட்டுச்
சேவை நிறுவனத்தின் கூட்டத்தில் பங்கேற்று "இன்றைய பன்னாட்டுச் சூழலில்
திருஅவையின் தூதுறவு" என்ற தலைப்பில் பேசியபோது இவ்வாறு கூறினார்
திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
**திருஅவையின் தூதுறவானது பொதுநலன், நாடுகளுக்கிடையே ஒற்றுமை,
துணைத்தன்மை ஆகியவற்றை முன்னிறுத்தி நமது காலத்தின் அவசரப் பிரச்சனைகளை
எதிர்கொள்ள முயல்கிறது** என்றும், திருத்தந்தை வலியுறுத்துவது போல, "நமது
உலகம் பன்முகத்தன்மை கொண்டதாகவும், அதே நேரத்தில் மிகவும்
சிக்கலானதாகவும் மாறியுள்ளது எனவே அதற்கு, பயனுள்ள ஒத்துழைப்புக்கான
வேறுபட்ட கட்டமைப்புக்கள் தேவைப்படுகின்றன" என்றும் எடுத்துரைத்தார்.
அதிகார சமநிலையைப் பற்றி மட்டும் சிந்திப்பது
போதாது என்றும் புதிய பிரச்சினைகளுக்கு பதிலளித்தல், சுற்றுச்சூழல், பொது
சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூக சவால்களுக்கு உலகளாவிய வழிமுறைகளுடன்
எதிர்வினையாற்றுவது ஆகியவையும் தேவை** என்றும் வலியுறுத்தினார் பேராயர்
காலகர்.
இக்காலத்தில் வாக்குறுதி, ஆபத்து ஆகிய இரண்டிற்கும் மத்தியில் நாம்
வாழ்கின்றோம் என்றும், எதிர்பாராத வகையில் நாடுகள் ஒன்றோடொன்று
இணைந்திருக்கும் வகையில் பொருள்கள், சிந்தனைகள், தொழில்நுட்ப அறிவு
போன்றவற்றின் பரிமாற்றம் உள்ளது** என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக